கள்ளச்சாராய மரணம்: விழிப்புணர்வு தேவை… பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல் ஆறுதல்!

அரசியல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 23) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,

“இந்த தருணத்தில் இதை நாம் அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்ப்பதை விட நம் அனைவருக்கும் ஓர் கடைமை இருப்பதாகவே பார்க்க வேண்டும். வள்ளுவர் கள்ளுண்ணாமை குறித்து எழுதியிருக்கிறார்.

எனவே வள்ளுவர் காலத்திலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. அதில்  இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மக்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சாராய வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருமானத்தின் ஒரு பகுதியை கண்டிப்பாக விழிப்புணர்வு செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்.

மருந்துகடைகள் ஒரு தெருவில் எவ்வளவு இருக்க வேண்டுமோ, அதைவிட அதிகமாக டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. மது குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அளவோடு மது குடிக்க அறிவுரை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து. விபத்துக்கள் நடக்கிறது என்று சாலையை இழுத்து மூட முடியுமா? இதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. மதுவிலக்கு முழுமையாக கொண்டு வந்தபோது, மாஃபியாக்கள் தான் அதிகமாகியிருக்கிறதே தவிர, மது பயன்பாடு குறைந்தபாடில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் வெற்றி… செந்தில் பாலாஜியை சந்திக்க முடியவில்லை: ஜோதிமணி வருத்தம்!

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0