தங்க சுரங்கத்தையே கொடுத்தாலும் கோவையில் திமுக வெற்றி பெறாது : அண்ணாமலை

அரசியல்

தங்க சுரங்கத்தையே கொடுத்தாலும் கோவையில் திமுக வெற்றி பெறாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு எம்பி-ஐ ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மூவர்ண கொடியாக இருக்கும் தேசியக்கொடியை ஒரே வண்ணமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “கமல்ஹாசன் அல்லது யார் இதுபோன்று சொன்னாலும் மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்

நல்லா சாப்பிடுகிறார்களா… வடது, இடது என இரு பக்க மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவோடு இருக்கிறார்களா என பார்க்க வேண்டும்.

கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை கொடுக்க வேண்டும். சென்னைக்கு ஒரு தலைநகர் கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இருக்கிறது. அங்கு இந்தியாவின் தலைநகரம் சென்றுவிடும் என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களது தலையை பரிசோதிக்க வேண்டும்.

ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக இப்படி கூவ வேண்டும் என்று நினைக்கிறாரா என கமல்ஹாசன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று விமர்சித்தார் அண்ணாமலை.

மேலும் அவர், “கரூர் கம்பெனி கோவைக்கு வந்துவிட்டனர். சிறையில் இருந்தவாறு செந்தில் பாலாஜி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்துக்கொண்டிருக்கிறார். செல்போனில் பேசுகிறார்.

இந்த முறை என்ன செய்தாலும் கோவை மக்கள் தெளிவாக உள்ளனர். தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் கோவையில் திமுக வெற்றி பெறாது” என்றார்.

முன்னதாக சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்த தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

முதல்வருக்கு கிடைத்த தருமபுரி ரிப்போர்ட்…மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகல துவக்கம்!

+1
0
+1
0
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *