மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 21) கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் அழைத்தது நான் தான்.
இந்த ஆறு ஆண்டு கால பயணத்தில், நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம். நியாயமில்லாத விஷயங்கள் எழுபது வருடங்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் கற்றுக்கொண்டோம்.
ஒருபக்கம் தேர்தல் ஆணையம் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதேநேரத்தில், எங்களைப் போன்ற சிறிய கட்சிகளை மதித்து தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது, நல்லவர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பினால் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இப்படி பல சாதனைகளை இந்த ஆறு ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யம் செய்துள்ளது” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெற்கு தேய்ந்தால் பரவாயில்லையா? – மத்திய அரசை விமர்சித்த கமல்
‘இதெல்லாம் ஒரு ஆட்டமா’ ஓபனாக திட்டிய பயிற்சியாளர்… இன்னும் நீங்க திருந்தல?