மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (நவம்பர் 7) தனது பிறந்த நாளை அர்த்தம் உள்ள வகையில் கொண்டாடினார். Kamal Haasan put together Shekharbabu-Paranthaman
சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதோடு நின்று விடாமல்… தனது அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடியாக இருக்கிறார் கமல்ஹாசன்.
இந்த வகையில் நேற்று தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரத்தை அன்பளிப்பாக அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிகழ்ச்சி நடைபெறும் வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு, நிகழ்ச்சி நடைபெறும் எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வட சென்னை திமுகவினர்… “நம்மளால முடியாததை கமல்ஹாசன் செஞ்சிட்டாரு” என்று அரசியல் ரீதியாக கிசுகித்துக் கொண்டனர்
அப்படி என்ன கமல்ஹாசன் செய்துவிட்டார்?
அமைச்சர் சேகர்பாபுவுக்கும் எம்.எல். ஏ. பரந்தாமனுக்கும் இடையில் உள்ள ஏழாம் பொருத்தம் சென்னையில் இருக்கும் அனைத்து திமுகவினரும் அறிந்ததுதான்.
மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தன்னை எம்.எல்.ஏ. பரந்தாமன் மதிப்பதில்லை என்று சேகர்பாபுக்கு வருத்தம்.
ஆனால் தனது வளர்ச்சிக்கு அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து தடையாக இருக்கிறார் என்பது பரந்தாமனின் வருத்தம். சேகர்பாபுவை பற்றி அமைச்சர் உதயநிதியிடமே புகார் செய்திருக்கிறார் பரந்தாமன்.
இந்தப் பின்னணியில் சேகர்பாபுவும், பரந்தாமனும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அரிதாகிவிட்டது.
சேகர்பாபு நிகழ்ச்சி என்றால் பரந்தாமன் அங்கே இருக்க மாட்டார். பரந்தாமன் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி என்றால் அங்கே சேகர்பாபு இருக்க மாட்டார். இதுதான் வடசென்னை திமுகவின் வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியின் மூலம் வடசென்னை திமுகவின் எதிரெதிர் முகாம்களாக இருக்கும் சேகர்பாபுவும் பரந்தாமனும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து சில நிமிடங்கள் நேரில் சந்தித்துக் கொள்வதும் அருகருகே அமர்வதுமான சூழல் ஏற்பட்டு விட்டது.
இருவருமே செயற்கையான புன்னகைக்கு கூட இடம் கொடுக்காமல் பல்லை கடித்துக் கொண்டு பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
கமல் நிகழ்ச்சி என்பதால்தான் சேகர்பாபு, பரந்தாமன் இருவரும் வேறு வழியின்றி இங்கே வந்திருந்தனர். அந்த வகையில் வடசென்னை திமுகவினர் இதை ரசித்து கமலுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். Kamal Haasan put together Shekharbabu-Paranthaman
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்..
–வேந்தன்
தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகள்: சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி!
நிரம்பும் வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!