கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 21) ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 48 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மாற்றம், காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆகியோர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கள்ளச்சாராயம் விற்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பார்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்… ‘கோட்’ இரண்டாவது சிங்கிள் அப்டேட்!
கள்ளச்சாராய மரணம்… ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!