கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 69 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 5) மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால், காலத் தாமதம் ஏற்படும். அதனால் தமிழக காவல் துறையே இந்த விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள இவ்வழக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று அதிமுக வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முரசொலி அறக்கட்டளை குறித்து கருத்து… எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து!
கல்யாணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு டாக்டர், எம்.டி பட்டம் பெற்ற சிவகார்த்திகேயனின் சகோதரி!