kalaingar who left an indelible mark in history": Prime Minister Modi eulogy!

”வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்”: பிரதமர் மோடி புகழாரம்!

அரசியல் இந்தியா

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 18) கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கலைஞர் இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்.

ஒரு அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர். பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

Image

இந்த நினைவு நாணயம் வெளியிடப்படும் நிலையில், கலைஞரின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவர் நிலைநிறுத்தப்பட்ட இலட்சியங்களைப் போற்றுவதாகவும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும்.

இந்த முக்கியமான தருணத்தில், கலைஞருக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய பிரதமரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

100 ஏக்கரில் தமிழக வெற்றிக் கழக மாநாடு : கட்சி நிர்வாகிகளை எச்சரித்த விஜய்

ஆவணி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *