பேனா நினைவுச் சின்னம் : மத்திய அரசு அனுமதி!

சென்னை மெரினா கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இன்று(ஜூன் 22) அனுமதியளித்துள்ளது.

மறைந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு மெரினா கடலில் ரூ.80 கோடி மதிப்பில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கலைஞர் தமிழ் மொழிக்கு செய்த சிறப்பு, அவரின் எழுத்தாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவும் 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மெரினா கடலில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் 15 நிபந்தனைகளுடன் இன்று (ஜூன் 22) அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் தமிழ்நாடு அரசு விரைவில் பணியை தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்

மு.வா.ஜெகதீஸ் குமார்

”ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை”-அமைச்சர் தங்கம் தென்னரசு

அமலாக்கத் துறை மாறி மாறி பேசுகிறது: என்.ஆர்.இளங்கோ

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts