கலைஞர் நூற்றாண்டு நினைவாக கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 தொடங்கி அடுத்த ஜூன் 3 வரை கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 7000 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் உடல்நிலை காரணமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் பங்கு கொண்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தற்போது கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பளிங்கு கற்களாலான கலைஞர் திருவுருவ சிலையையும் முதல்வர் ஸ்டாலினும், அவரது சகோதரி செல்வியும் சேர்ந்து திறந்து வைத்துள்ளனர்.
மேலும் அங்குள்ள முத்துவேலர் நூலகத்தை தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்த நிலையில், ஐந்து ஏழை ஜோடிகளுக்கு கோட்டத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற உள்ள மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்ந நிகழ்ச்சியில் கனிமொழி, டி.ஆர்.பி. பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பிக்களும், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா
’அமமுக இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது’: டிடிவி தினகரன்
விஜய் குறித்து அவதூறு: பாஜக பெண் நிர்வாகி கைது!
”நாகாலாந்து போராடியது போல தமிழ்நாடும் போராட வேண்டும்”- ஆளுநருக்கு எதிராக வைகோ கையெழுத்து இயக்கம்!