வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பு ’செம்மொழியான தமிழ்மொழி’ என்ற தலைப்பில் இடம்பெற உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசியலைத் தாண்டி தமிழ் மொழி வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
கடந்த முறை திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் இருந்த கருணாநிதி, 2010ஆம் ஆண்டு கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை பிரம்மாண்டாக நடத்தினார். அப்போது செம்மொழி வாழ்த்துப் பாடலையும் எழுதினார்.
அது மாநாட்டின் அதிகாரபூர்வப் பாடலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்றைய திமுக அரசு அனைத்துப் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் செம்மொழி வாழ்த்தை இடம்பெற முடிவு செய்து அச்சிடப்பட்டது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து செம்மொழிப் பாடலை நீக்கியது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
அதனைத்தொடர்ந்து, மீண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செம்மொழி பாடல் மற்றும் பிற இலக்கியப் படைப்புகளை பாடப்புத்தகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழ்மொழிக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு குறித்து முதன்முறையாக 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் செம்மொழியான தமிழ்மொழி என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞரின் தமிழ் பங்களிப்பு குறித்த பாடம் மாணவர்களின் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேங்கைவயல்: செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!
திருச்சி மாநாட்டிற்கு பந்தகால் நட்ட ஓபிஎஸ் தரப்பு!