கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து: திமுக அறிவிப்பு!

அரசியல்

இன்று (ஜூன் 3) நடைபெறவிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் தற்போது வரை 233 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா முழுவதும் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், இன்று( ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

மேலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் கலைஞர் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கோரமண்டல் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சோயா மொச்சை கிரேவி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *