கலைஞருக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை இன்று(ஏப்ரல் 7) கடிதம் எழுதியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் வைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதோடு பேனா நினைவு சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்துள்ளது.
விரைவில் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்று மண்டல நிபுணர் குழு கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளது.
பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வைக்க ஒப்புதல் வழங்க கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மத்திய அரசுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளது.
மோனிஷா
நம்பியை தொடர்ந்து ஜி.டி.நாயுடுவாக உருமாறும் மாதவன் h
1 முதல் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு: தேதி வெளியீடு!