தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 4) முரசொலிக்குச் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், “தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசனும் மற்றும் எம்.ஜி.ஆரும் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர்.
கலைஞர் எழுதிய “பராசக்தி” படத்தின் அற்புதமான, சமுதாயத்தை சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார்.
எம்.ஜி.ஆர்-க்கு “மருதநாட்டு இளவரசி”,“மந்திரி குமாரி”, “மலைக்கள்ளன்” போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படத்துக்கும், 1952ல் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்துக்கும் கலைஞர்தான் வசனம் எழுதினார். இதில் ராஜகுமாரி படம் தான் கலைஞர் வசனம் எழுதிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக யாத்திரை ஒத்திவைப்பு : அண்ணாமலைக்கு என்னாச்சு?
கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!