கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

Published On:

| By Selvam

கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னையில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது.

அமைதி பேரணியானது காலை 8 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து துவங்கியது. அப்போது ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேரணியானது ஓமந்தூரார் வளாகத்திலிருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது.

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

செல்வம்

மார்பக புற்றுநோய்: அங்காடித் தெரு’ சிந்து காலமானார்!

கலைஞருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share