கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 7) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னையில் இன்று காலை 8 மணிக்கு அமைதி பேரணி துவங்கியது.
பேரணியானது சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைகிறது. அங்கு ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செல்வம்
ஜி-20 உச்சி மாநாடு: இந்தியா வரும் ஜோ பைடன்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
WI vs IND: சொதப்பிய இந்திய அணி: வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!
ஹாக்கி: மலேசியாவை வீழ்த்திய இந்தியா