கலைஞர் நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

Published On:

| By Selvam

கலைஞர் நினைவு தினத்தை ஒட்டி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள் சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை 8 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி ஸ்டாலின் தலையில் அமைதிப் பேரணி தொடங்கியது.

இந்த பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியானது கலைஞர் நினைவிடத்தை அடைந்ததும் முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலைஞருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

முன்னதாக கலைஞர் நினைவு தினத்தை ஒட்டி திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்சியில் கலைஞர் சிலை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Olympics 2024: டோக்கியோவில் விட்டதை பாரிஸில் பிடிப்பாரா அதிதி அசோக்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment