தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) துவங்கி வைத்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதிவாய்ந்த 1 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் ஏற்கனவே தன்னார்வலர்கள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை கேட்டறியும் விண்ணப்ப பதிவு முகாம் இன்று முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விண்ணப்ப பதிவு முகாமில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 35, 923 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் விண்ணப்ப பதிவு முகாமை இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!
அவதூறு பேச்சு: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது!