காரில் போகும் போது ரஜினிக்கு கைகாட்டிய கலைஞர்
நடிகர் ரஜினிகாந்த், தான் கலைஞரை எப்போது முதன்முறையாகப் பார்த்தேன் என்ற சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 4) “கலைஞர் இதயத்தில் தனக்கென்று தனி இடம் இருந்தது” என்ற தலைப்பில் முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் தான் எப்போது முதன் முதலில் கலைஞரை பார்த்தேன் என்று நினைவுகூர்ந்துள்ளார்.
“1977 ஆம் ஆண்டு என்னுடைய TMU 5004 பியட் காரை மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது.
வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி கலைஞர் என்று தெரிந்தது.
நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார்.
காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞர் அவர்களை முதல் முதலில் பார்த்தது” என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்.ஜி.ஆர். சிவாஜியை நட்சத்திரமாக்கிய கலைஞர்
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ஏ.ஆர்.ரகுமான்
இந்திய வீரர்களை ஏமாற்ற முயற்சி…. போராடி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
அதிமுக ஆரம்பிக்க எம்.ஜி.ஆர். சொன்ன காரணம்- ரஜினி வெளியிட்ட ரகசிய ஆடியோ!