திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகின்றது.
தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடக்க நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக கொண்டாடுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ளது.
அதில், பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும் , கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
திராவிட மாதக் கொண்டாட்டம் ஏன்? டி.ஆர்.பி.ராஜா