ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று (ஆகஸ்ட் 16) அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டிற்கு சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டி மாபெரும் மாநாடாக நடத்திட வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டிற்கு தொண்டர்களை திரட்டுவதற்கான விளம்பர யுக்திகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகளவிலான கூட்டத்தை திரட்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் போட்டியையும் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி அதிமுக மாநாட்டிற்கு வருமாறு ரஜினி ரசிகர்களை அழைத்துள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள சத்யபாமா திரையரங்கில் காலை காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் (550) கடம்பூர் ராஜு முன்பதிவு செய்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
கடம்பூர் ராஜுவின் இந்த செயல் ரஜினி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
நீட் தேர்வு: திமுக உண்ணாவிரதம்!
‘இது தற்செயலானது’ : மனைவியை சுட்டு கொன்ற நீதிபதி!