அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்திருக்கிறது. அதேசமயம் உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. K.P. Munusamy on sengottaiyan
இதை வரவேற்று பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும். எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் இன்று (பிப்ரவரி 14) அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செங்கோட்டையன் மீது நம்பிக்கை K.P. Munusamy on sengottaiyan

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படம் இல்லை என்று புறக்கணித்திருக்கிறார். இது அரசியலாக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் கட்சிக்குள் செங்கோட்டையன் பேசியிருக்க வேண்டும். அவர் பொதுதளத்தில் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்று கூறுகிறார்களே?
செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜிஆர் மறைவுக்கு பின், ஜெயலலிதா அதிமுகவை தலைமை ஏற்று நடத்திய போது, அவரது அருகே ஒரு முன்னணி தளபதியக பணியாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவரது உழைப்புக்கு ஏற்றவாறு ஜெயலலிதா செங்கோட்டையனுக்கு உயர்ந்த பதவி கொடுத்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், மூத்த தலைவரான செங்கோட்டையனை மதித்து அழைத்துச் செல்கிறார். செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து நிற்பவர்.
அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமி சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கின்றவர்.
ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கிற ஒரு தலைவர் பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும், நம்மால் இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு இறுதி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஏன் இந்த இரட்டை வேடம் K.P. Munusamy on sengottaiyan

அதிமுக ஒன்றிணைந்தால் தான் வாழ்வு, இல்லையென்றால் தாழ்வு என்று ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாரே?
இதை அவருடைய கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். எனக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் அடுத்த நிமிடம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார். இதற்கு என்ன அர்த்தம்.
கட்சியை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கிறார், எதிரிகளோடு சேர்ந்து செயல்படுகிறார். கட்சி தலைமையகத்தில் புகுந்து பொருட்களை சேதாரப்படுத்துகிறார். இதற்கெல்லாம் என்ன பொருள்.
எம்.ஜிஆர் மறைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலைமை இருந்தது. அப்போது ஜெயலலிதாவை இந்த கட்சிக்கு தலைமை ஏற்க வைக்கக் கூடாது என்பதற்காக ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் எல்லாம் இணைந்து, ஜானகி அம்மையாரை முன்னிறுத்தினார்கள். முதலமைச்சர் பொறுப்பையும் கொடுத்தார்கள்.
அதற்கு பின்பு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சிக் கவிழ்ந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஜானகியை முன்னிறுத்தி சிவாஜி கணேசனோடு கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிட்டார்கள்.
ஆனால் தேர்தல் முடிவில் வாக்கு வங்கியை பார்த்தபோது, ஜெயலலிதாவைதான் மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என தெரியவந்தது.
ஜெயலலிதாவை வெளியேற்ற ஜானகியை வைத்து முயற்சி செய்தார்கள், ஆனால் ஜானகி ஒரு முடிவெடுத்தார். இந்த இயக்கத்தை உருவாக்கியவர் எனது கணவர்.
அவர் உருவாக்கிய இந்த இயக்கம் பாழ் பட்டுவிடக்கூடாது, மக்கள் ஜெயலலிதா பக்கம் இருக்கிறார்கள். என்னை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று ஜெயலலிதாவை அழைத்து நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்றார். எம்.ஜி.ஆருடைய கட்சியை, தலைமை கழகத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால் சிலர் இந்த கட்சியிலேயே உள்ளே நுழைந்து அதிகாரம், பண பலத்தை அனுபவித்துவிட்டு, வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு இந்த கட்சியை அழிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது என்ன நிலை? எதற்கு இரட்டை வேடம்.
இதை சொல்ல டிடிவி தினகரன் யார்? K.P. Munusamy on sengottaiyan

வருகிற தேர்தலில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். அதேசமயம் எடப்பாடி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரு கருத்தையும் வைக்கிறாரே?
அவர் யார் கேட்பதற்கு. ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டவர் டிடிவி தினகரன். போயஸ் தோட்டத்துக்கே வரக்கூடாது என்று கூறி வெளியேற்றப்பட்டவர். அவருடைய சித்தியை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தியவர். அதன்பிறகு ஒரு கட்சியை துவக்கிவிட்டார். அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. பொதுச்செயலாளரை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
2021 தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஒன்றிணைய சொல்லி அமித்ஷா எவ்வளவோ சொன்னார். ஆனால் எடப்பாடி கேட்கவில்லை என்று ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாரே?
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தலைவர்கள் எந்த சிந்தனையோடு வழிநடந்தார்களோ, அந்த வழியில் செல்பவர். எனவே மாற்றுக்கட்சி தலைவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு எங்களை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவாக்கவில்லை.
அதிமுக உட்கட்சி வழக்கில் வழங்கபட்ட தீர்ப்பு குறித்து…
தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. விதி 15ன் படி ஒரு இயக்கத்தில் பிளவுபடுகிற நேரத்தில் சின்னம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும், உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் விசாரித்தால் நல்லதுதான். 2400 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறார். 3 பேரை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியிடம் இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு பயமில்லை.
அதிமுகவில் சில துரோகிகள் இருக்கிறார்கள், அவர்களது முகத்திரையை விரைவில் கிழிப்போம் என்று செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரே?
அவருடைய கருத்துபடி இருக்கலாம். அவரது மாவட்டத்திலேயே கூட இருக்கலாம். இது ஒரு பெரிய இயக்கம். எல்லோரும் கட்சியின் விசுவாசியாக இருந்தாலும், கட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் என்று வரும் போது ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொள்ளும் சமயத்தில் தவறு நடந்திருக்கலாம். அப்படி கட்சிக்கு தவறு செய்தவர்களை அடையாளம் காட்டுவதற்காக அப்படி சொல்லியிருக்கலாம்.
இரட்டை இலையை முடக்குவதற்கு சூழ்ச்சி இருப்பதாக சொல்கிறார்களே?
இதையெல்லாம் தோற்கடித்து எடப்பாடி பழனிசாமி வெல்வார். எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட சின்னம் இது. இதை யாராலும் முடக்க முடியாது.
செங்கோட்டையன் கருத்து தெரிவித்த பிறகு அவரது வீட்டுக்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதே?
ஏதோ ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி, செங்கோட்டையனை எதிரிகள் வந்து தாக்குவது போல, இவர்கள் வந்து காப்பாற்றுவது போல இன்றைய முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடிக்கிறார். ஒரு வெட்கம்கெட்ட அரசியல்வாதி. (ஸ்டாலின் என்று சொல்வதற்கு பதிலாக, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு வெட்கம் கெட்ட அரசியல்வாதி என்று கே.பி.முனுசாமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இதேபோல ஒரு நிலைமை ஜெயலலிதா இருந்தபோது வந்தது. வை கோபால்சாமி கட்சியை விட்டு வெளியே சென்றார். அப்போது மிகப்பெரிய ஊர்வலம் வருகிறது. அப்போது அறிவாலயம் தாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் திமுகவுக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
நாங்கள் எங்கே இருக்கிறோம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.
இவ்வாறு பேசினார் கே.பி.முனுசாமி. K.P. Munusamy on sengottaiyan