ரூ.9,600 கோடியில் நிறைவேறும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

அரசியல்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.9,600 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் திருவண்ணாமலையில் நடந்த மூன்று மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரூராட்சி தலைவர்கள், 9 நகராட்சியின் நகரமன்றத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான,

சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய், வணிக வளாகம், பஸ் நிலையம், புதிய அலுவலக கட்டடம், நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

மேலும் அவர்கள் கோரிக்கைகளை மனுவாகவும் அளித்தனர். இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது, “இந்தக் கூட்டம் முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று கூட்டப்பட்டுள்ளது.

இதில் நகர மன்றத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

அவை அனைத்தையும் துறையின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் கேட்டு கொண்டதன் பேரில் முதலமைச்சர் ரூ.9,600 கோடிக்கு திட்டம் தந்துள்ளார்.

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. திட்ட அறிக்கை முடிந்த பின்னர் அந்த பணிக்கு டெண்டர் விடப்படும்.

மழை காலங்கள் வருவதால் ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வாரி வைத்து கொள்ள வேண்டும்.

புதிய இடங்களில் கால்வாய்கள் தோண்டப்படுமானால் விரைந்து பணிகளை முடிக்க அனைத்து ஆணையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

புதிய பஸ் நிலையம் திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.30 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றார்.

அதன்பின் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்

-ராஜ்

செப்டம்பருக்குள் 80 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையும்: அமைச்சர் கே.என்.நேரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *