கே.சி.ஆர். கலாய்… அண்ணாமலை பதில்!

அரசியல்

தெலுங்கானா சட்டசபையில் இன்று (செப்டம்பர் 12) முதல்வர் சந்திரசேகர ராவ், தம்மைப் பற்றிப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதற்காக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கு இன்று (செப்டம்பர் 12) சட்டப்பேரவையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பதிலளித்துள்ளார்.

ஜூலை 5ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற பிஜேபி கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பேசிய அண்ணாமலை,  “மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்ததுபோல் தமிழகத்திலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்” எனத் தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்திருந்தனர். 

இதற்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டசபையில் இன்று பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்கப் போவதாக பாஜக கூறுகிறது.

தமிழ்நாட்டில் இருந்துகூட ஏக்நாத் ஷிண்டே வரப் போவதாக அண்ணாமலை சொல்கிறார்.

அண்ணாமலையால் அவரின் சொந்த தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியைப் பெற முடியாத அண்ணாமலைதான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார்.

ஏக்நாத் ஷிண்டே வகை அரசியல்தான் உங்களின் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா?” எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு அண்ணாமலை இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,  “கே.சி.ஆர். (தெலுங்கானா முதல்வர்) குடும்ப ஆட்சியின் கொடுங்கோலாட்சியால், தெலங்கானா மாநிலம் தாங்கும் பிரச்சனைகளில் என்னைப் பற்றி மாநில சட்டசபையில் பேசி நேரத்தைக் கழிக்கிறார்.

தாங்களே முதல் தேர்தலில் ஜெயிக்க வில்லை. அதுபோல், மு.க.ஸ்டாலினும் தம்முடைய முதல் தேர்தலில் ஜெயிக்கவில்லை என்பதை தங்களுக்கு (கே.சி.ஆர்) நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. நாம் நமது பணியின் மூலம் மக்களின் நம்பிக்கையை ஈட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டாலும், தெலுங்கானா சகோதர சகோதரிகளிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

நீட் தேர்ச்சிக் குறைவு- அன்பில் மகேஷ்தான் காரணம்: அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0