கடிதம் எங்கே? – செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 26) உத்தரவிட்டுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வலா, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில், “அமைச்சர் ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஆளுநர் ஏற்காத நிலையில் அமைச்சராக அவர் தொடர முடியாது. அமைச்சரவை கூட்டங்களில் செந்தில் பாலாஜி கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் அவர் அமைச்சராக தொடர்வது சட்டவிரோதம்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தவிட்டனர்.

இன்று மதியம் கடித்தை தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததால் வழக்கின் விசாரணையை மதியத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செல்வம்

கோவில் திருவிழா கலவரம்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது!

இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts