அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (அக்டோபர் 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இரு முறை ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல் நிலையை காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் நேற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்தவாறு சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டார்.
இதனை ஏற்று செந்தில் பாலாஜியின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்
போராட்ட களமாய் சென்னை : அண்ணாமலை