அனைவருக்குமான நீதி என்னும் எட்டாக்கனி!

Published On:

| By Minnambalam

ராஜ்தீப் சர்தேசாய்

ஆண்டுதோறும் நடைபெறும் கொல்கத்தா கிளப் விவாத அரங்கின் இந்த ஆண்டுக்கான விவாத அரங்கம் அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. ‘நீதி கோரப்படுகிறது… ஆனால், அது கிடைப்பது அரிதாக உள்ளது‘ என்னும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கலந்துகொண்டார்கள். மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் இந்த அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. Justice for all is an elusive thing

எதிரணியில் இருக்கும் எனது சகாக்களின் போலியான சிரிப்பானது அவர்களின் தர்மசங்கடமான நிலையை மறைக்க மட்டுமே உதவுகிறது. பாதுகாக்க முடியாத ஒன்றுக்கு ஆதரவாக கொல்கத்தா டிபேடிங் சொசைட்டி, கொல்கத்தா கிளப் உறுப்பினர்கள் இங்கு வந்துள்ளனர்; நாட்டின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பு சிதைந்துள்ளது. கடந்த 40 நிமிடங்களாகக் கேட்ட அர்த்தமற்ற பேச்சுகளை ஒதுக்கிவிட்டு இதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். Justice for all is an elusive thing

எதிரணியில் உள்ளோர் வார்த்தை விளையாட்டில் இறங்கிவிட்டது விநோதமாகத் தெரிகிறது. ‘அடிக்கடி’, ‘அரிதான’ என்ற இரு வார்த்தைகளைப் பயன்படுத்தி, பாதுகாக்க முடியாத ஒன்றுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். என் பல்கலைக்கழக நண்பர்களான ஆர்கோஸும் குப்தாவும் இவர்களுள் அடக்கம். ஒரே பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தாலும், அவர்களை ஒரேமாதிரி எடைபோடக் கூடாது.

இன்னும் விநோதமான விஷயம் என்னவெனில் ‘மெழுகுவர்த்திகளை ஏற்றிப் பேரணி நடத்தாததால் பெரும்பாலும் நீதி கோரப்படுவதில்லை’ என்கிறார் எனது முன்னாள் சகா பர்கா தத். ஆன்லைன் பிரச்சாரத்துடனும் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடனும் நீதியைக் குழப்பிக்கொள்வதால் சட்டத்தால் மோசமாக பாதிக்கப்படும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் நீங்கள் அவமதிக்கிறீர்கள். உண்மையான விஷயத்திலிருந்து திசை திருப்பவும் குழப்பவும் மட்டுமே தெரிந்த உயர்தட்டு வர்க்க எதிர்த்தரப்பை நீங்கள் முன்வைக்கிறீர்கள். சக்தியற்றும் ஏழையாகவும் நலிந்தும் இருப்போருக்கு இந்நாட்டில் நீதி கிடைப்பதில்லை என்பதே உண்மை. நமது மாண்புமிகு நடுவர் முன்பு அங்கம் வகித்த கட்டமைப்பை யாரால் அணுக முடிகிறதோ அவர்களுக்கும், அதில் செல்வாக்குள்ளோருக்கும் மட்டுமே இந்நாட்டில் நீதி கிடைக்கிறது. Justice for all is an elusive thing

Justice for all is an elusive thing

இரு பத்திரிகையாளர்களின் கதை Justice for all is an elusive thing

நேர்மையாக ஒரு விஷயத்தை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். புகழ்பெற்ற நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்; இதைச் சொல்கையில் நான் சற்று கவனமாக இருந்தாக வேண்டும். ஆனால், இன்று இதை நான் சொல்ல விரும்புகிறேன். நாட்டின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இரு பத்திரிகையாளர்களின் கதையை உங்களுக்குக் கூறியாக வேண்டும். Justice for all is an elusive thing

2020 நவம்பரில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான விடுமுறை பெஞ்ச் ஒரு சனிக்கிழமையன்று கூடியது; தற்கொலைக்குத் தூண்டியதாகத் தவறான காரணத்தால் (எனது கணிப்பின்படி) மகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டிருந்த எனது மற்றொரு முன்னாள் சகாவான அர்னாப் கோஸ்வாமி 6 நாட்கள் சிறைவாசம் செய்தபின் கூடிய நீதிமன்றம் கோஸ்வாமிக்கு அரசியல் சாசன சுதந்திரம் கிடைப்பதை உறுதிசெய்தது. சுதந்திரம் பற்றி திரு.சந்திரசூட் அப்போது பேசியிருந்தார். நாட்டின் இயல்பான ஒரு குடிமகன் கோருவதைப் போன்ற நீதியைத்தான் கோஸ்வாமி கோரியிருந்தார். அவருக்கு ஜாமீனும் சுதந்திரமும் வழங்கிய நீதிமன்றத்தைப் பாராட்டுகிறேன். Justice for all is an elusive thing

2020 அக்டோபரில் 19 வயதான தலித் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எழுதுவதற்காகப் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஹத்ராசுக்குச் செல்லும்போது கைது செய்யப்பட்டார். சித்திக் கப்பன் அப்போது மலையாளச் செய்தித்தாள் ஒன்றின் இணையதளத்தில் பணியாற்றி வந்தார். மலையாளப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் அவர் இருந்தார். UAPA, PMLA ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் கைதானார். UAPA வழக்கில் 2022 செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது; ஆனாலும் கைதாகி இரண்டாண்டுகளுக்கு மேல் இறுதியாக 2023 பிப்ரவரியில்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். Justice for all is an elusive thing

அர்னாப் கோஸ்வாமிக்கும் சித்திக் கப்பனுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று இம்மாமன்றத்தை கேட்கிறேன். இருவரது குடும்பத்தினரும் நீதி கோரி நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார்கள். கோஸ்வாமி பிரபலமானவர்; புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நெறியாளர். அவ்வளவாகப் புகழ்பெறாத கப்பனுக்கு – இதை நான் தைரியமாகச் சொல்கிறேன் – அவரது பெயரும் மதமும் பெரும் தடையாக அமைந்தன. நண்பர்களே, இதுதான் நமது நீதிமன்றங்களின் உண்மை நிலை. சுதந்திரம், விடுதலை பற்றி வானளாவப் பேசும் நமது நீதிபதிகளும் இதில் அடங்குவார்கள்.

இவர்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை?

நண்பர்களே, இன்று நான் உங்கள் முன் ஒரு பொதுக் கேள்வியை வைக்கிறேன். வழக்காடலோ, குற்றச்சாட்டோ இல்லாமல் இரண்டு ஆண்டுகள் யாரையும் தடுப்புக்காவலில் வைக்கலாம் என்ற கொடிய பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, கைதான காஷ்மீர் மக்களுக்கு என்ன விதமான நீதி கிடைக்கிறது? அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீதி கோரவில்லையா? அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

மீண்டும் உங்களைக் கேட்கிறேன்: பழங்குடியினர் உரிமைகளைக் கோரிய ஒரே காரணத்திற்காக UAPA சட்டத்தின் கீழ் கைதான 80 வயது பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு எவ்வித நீதி கிடைத்தது? டம்ளர் மூலம் குடிக்க முடியாமல் ஸ்டிரா உள்ள சிப்பரை அவர் கேட்டும் நீதிமன்றம் மறுத்த நிலையில் காவலில் இருக்கும்போதே அவர் உயிரிழந்தார். இதுதான் நீதி வழங்கும் முறையா? திஹார் சிறையில் சுப்ரதாராய் சஹாரா கோரிய அனைத்துச்  சிறப்பு வசதிகளும் அவருக்குத் தரப்பட்டன. வைஃபை வசதியும் இதில் அடக்கம். சுப்ரதாராய் சஹாராவையும் ஸ்டான் சுவாமியையும் ஒப்பிட்டுப்பாருங்கள். என்ன காரணம்? Justice for all is an elusive thing

சமத்துவமற்ற சமுதாயம் Justice for all is an elusive thing

நமது சமுதாயமானது மிகவும் சமத்துவமற்ற சமுதாயமாகும். இதைத்தான் நமது நீதித்துறையும் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீதிபதிக்கு நமது சட்ட உதவிக் கட்டமைப்பின் நிலை பற்றியும் நீதி மறுக்கப்பட்டவர்களின் சார்பாகக் கட்டணமின்றி வாதாடி நீதியை நிலைநாட்ட எத்தனை வழக்கறிஞர்கள் முன்வருவார்கள் என்றும் அவருக்குத் தெரியும். இன்று நமக்கு முன்னுள்ள தலைப்பின் உண்மை நிலையும் இதுதான், நண்பர்களே! பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டுமென நாம் அனைவரும்தான் கோருகிறோம். நீதி வழங்க நல்ல இதயமும் நாட்டை உருவாக்கிய முன்னோர்கள் தந்துள்ள அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைத்துள்ள உள்ளுணர்வும்தான் தேவை. அனைத்தையும்விட நீதியை அணுகச் சம வாய்ப்பு தேவை.

நுழைவுத் தடை Justice for all is an elusive thing

உண்மை என்னவெனில் இங்கு ‘நுழைவுத் தடை’ உள்ளது. அரிதாகத்தான் நீதி வழங்கப்படுகிறது எனக் கூறும்போது இந்த நுழைவுத் தடை மீதுதான் நீங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். உதாரணமாக, மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளதைப் பாருங்கள்: ‘ஏதாவது ஓரிடத்தில் நீதி மறுக்கப்பட்டால் எல்லா இடங்களிலும் நீதி மறைந்துவிடும்’.

Justice for all is an elusive thing

இன்றைய இந்த வாதத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வழக்கைப் பற்றி உங்களிடம் கூற விரும்புகிறேன். கவிஞரும் தில்லி பல்கலைக்கழக பேராசிரியருமான ஜி.என்.சாய்பாபா வழக்கும் அதன் வாதமும்தான். நக்ஸல் அனுதாபி என முத்திரை குத்தப்பட்டு எட்டரை ஆண்டுகள் வரை சிறைச்சாலையில் (பெரும்பாலும் தனிமைச் சிறையில்) அவர் வாடினார். குற்றமற்றவரென அவரை பாம்பே உயர் நீதிமன்றம் 2022 அக்டோபரில் விடுதலை செய்தது. ஆயினும் அசாதாரணமான முறையில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு ஒரு சனிக்கிழமையன்று நடத்தப்பட்டு சாய்பாபாவின் விடுதலை ரத்தாகி பாம்பே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. 

90% உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான ஜி.என்.சாய்பாபாவால் சமூகத்திற்கு ஏதாவது பேராபத்து நிகழ இருந்ததுபோல், திங்கட்கிழமை வரை காத்திருந்து விசாரிக்கக்கூட முடியாமல் நீதிமன்றம் சனிக்கிழமை கூடி இப்படிச் செய்திருக்க வேண்டுமா? அவரைத் திரும்பவும் சிறைக்கு அனுப்ப இப்படியோர் அவசரம் ஏன் காட்டப்பட்டது? 

நண்பர்களே; ஜி.என்.சாய்பாபா கடந்த ஆண்டு அமரராகிவிட்டார். சிறைவாசம் அவரது உடல் நலத்தை அளவுக்கு மீறிப் பாதித்துவிட்டது. அவரது குடும்பத்தினர் நீதி கோரவில்லை. அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் கூட்டம் நடத்தாததால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என எதிர்த்தரப்பிலோ அல்லது இங்கு குழுமியிருப்பவர்களில் யாராவதோ சொல்ல முடியுமா? அவர்கள் நீதி கோரிப் போராடினார்கள்; ஆனாலும் நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஒமர் கலீதின் குடும்பத்தார் நீதி கோரிப் போராடவில்லை எனச் சொல்வீர்களா? இம்மாதிரியான கூட்டங்களில் வாழ்க்கை, சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசும் சில நீதிபதிகள் ஏழைகள், நலிந்தோர் தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது அதை அமலாக்க மிகவும் தயங்குகின்றனர்.

நேரடி ஒளிபரப்பு என்னும் முரண்பாடு

கனவான்களே! சீமாட்டிகளே! இந்த உண்மைநிலைதான் எங்கு சென்றாலும் நமது கண்முன் வந்து நம்மை ஊடுருவ வேண்டும். வேறு எவரையும்விட இங்கு இச்சமயம் குழுமியுள்ளவர்களுக்கு இதைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். ஆர்.ஜி. கார் மருத்துவமனை வழக்கில் உணர்வின் அடிப்படையில் உடனே தெருக்களில் வந்து நீங்கள் போராடியதைப் பார்க்க மிக அருமையாக இருந்தது. ஆமாம், நீங்களனைவரும் நீதிகோரிப் போராடினீர்கள். உங்களது போராட்டங்களின் காரணமாக நீதி பெருமளவு எவ்விதத்தில் கிடைத்தது தெரியுமா? 

ஆர்.ஜி. கார் வழக்கை நேரடி ஒளிபரப்பு செய்யும் முடிவை மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எடுத்தார். நான் ஒன்று கேட்கிறேன். நாட்டில் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிமாக இருக்கின்றன அல்லவா? உயர்தட்டு மக்கள் சம்பந்தப்படாத இவ்வழக்குகளின் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய எத்தனை நீதிபதிகள் முன்வருவார்கள்?

இதுதான் இந்தியாவின் உண்மைக் கதை, நண்பர்களே! மக்கள்தொகையில் 10% பேர் நாட்டு வருமானத்தின் 70 சதவிகிதத்தைச் சம்பாதிக்கும் அளவு நமது சமுதாயம் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமுதாயமாக இருக்கிறது. அந்த 10% பேரால் எளிதாக நீதித்துறையை அணுகி நீதிகோர முடியும்; ஆனால் இந்த வாய்ப்பு ஏழைகளுக்கும் நலிந்தோருக்கும் இல்லை. உங்கள் உள்ளுணர்வு இருக்கும் இடத்தில்தான் முடிவெடுக்கும் புத்தியும் இருக்க வேண்டும்.  நாட்டின் குற்றவியல் நீதித்துறைக் கட்டமைப்பு சிதைந்துள்ளது என உங்களது உள்ளுணர்வு உங்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

‘நீதி ஆயோக்’ அறிக்கையின்படி நம் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரணை நடத்தி முடிக்க 324 ஆண்டுகள் ஆகுமாம். 324 ஆண்டுகளாம்! அத்தனை ஆண்டுகள் வரை நான் உயிரோடு இருக்க மாட்டேன். நம்மில் யாருமே அதுவரை உயிருடன் இருக்க மாட்டோம். ஆனால் இந்த நாடு தொடர்ந்து உயிர் வாழ வேண்டும். அனைவருக்கும் நன்றி! வணக்கம்!

ராஜ்தீப் சர்தேசாய்

Justice for all is an elusive thing - Rajdeep Sardesai

பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் செய்தி தொகுப்பாளர், அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்  ராஜ்தீப் சர்தேசாய்.  2008-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். தற்போது டிவி டுடே நெட்வொர்க்கில் ஆலோசனை ஆசிரியராக உள்ள இவர், முக்கிய பிரைம்-டைம் நிகழ்ச்சியை ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார். Justice for all is an elusive thing

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share