உச்ச நீதிமன்ற உத்தரவு… சூமோட்டோ வழக்குகளை ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published On:

| By Kavi

Justice Anand Venkatesh adjourned suo moto cases

Justice Anand Venkatesh adjourned suo moto cases

முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இவர்களை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்துப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இதை எதிர்த்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 5) விசாரணைக்கு வந்த நிலையில்,  ‘முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.

தலைமை நீதிபதி இந்த வழக்குகளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறுபக்கம் ஏற்கனவே தேதி அறிவித்தபடி இன்று மதியம் 3 மணிக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர்கள் மீதான வழக்குகள் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விளக்கமளித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆய்வு செய்து தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளைப் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்” ஸ்பெயினில் ஸ்டாலின் பேச்சு!

IND vs ENG: வேகப்பந்து வீச்சில் சுருண்ட இங்கிலாந்து… 2வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி!

Justice Anand Venkatesh adjourned suo moto cases

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel