இன்னொரு திரைப்பட வேலையை மட்டும் முடித்துவிட்டு, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (பிப்ரவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்ப்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
எனவே அரசியல் எனக்குப் பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.
என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உடல்நலக்குறைவால் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!
எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை : தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவிப்பு!