”என்னை யாரும் திரும்பப் பெறக் கேட்கவில்லை”-ஆளுநர் இல. கணேசன்

அரசியல்

தமிழக அரசியல் பற்றி இனிதான் படிக்கவேண்டும் என்று முன்னாள் பாஜக மூத்த பிரமுகரும் ஆளுநருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் தனது சகோதரர் இல‌.கோபாலன் குடும்பத்துடன் வருகை புரிந்து இன்று (நவம்பர் 5) சுவாமி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை , வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் இல.கணேசனிடம், தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளால் எழுப்பப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், என்னை யாரும் திரும்ப பெற வேண்டுமென கூறவில்லை, தமிழக அரசியல் பற்றி இனி தான் படிக்க வேண்டும் என்றார்.

இல.கணேசன் தனக்கு தமிழக அரசியல் பற்றி இனிதான் படிக்க வேண்டும் என்று கூறியது அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆளுநர் வருகையை ஒட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கலை.ரா

தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு!

நாடார் மகாஜன சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “”என்னை யாரும் திரும்பப் பெறக் கேட்கவில்லை”-ஆளுநர் இல. கணேசன்

  1. அது சாதனையோ தகுதி சான்றிதழோ இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *