ஜூலை 14ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 17 அமர்வுகள் நடைபெறவுள்ளன.

இதில் பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளன.

அதற்கு முன்னதாக வரும் ஜூலை 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

july 14 dmk mps meeting

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூலை 10) அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்படும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பிரியா

மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

தக்காளி பதுக்கலை தடுக்க முதல்வர் அறிவுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *