அமைச்சர் பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, 1996 – 2001ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2002ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் வேலூர் நீதிமன்றத்தால் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டனர்.
கீழமை நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால், நீதிபதி ஜெயச்சந்திரன் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வருகிறார்.
அந்தவகையில் இன்று (அக்டோபர் 19) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு பொன்முடி வழக்கு விசாரணைக்கு வந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆஜராகி, பொன்முடி மற்றும் அவர் மனைவி மீது பதிவு செய்யப்பட்ட சூமோட்டோ வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என தெரிவித்தார்.
இதைவிசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரியா
செந்தில்பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சிவண்ணாவின் ’கோஸ்ட்’ – ட்விட்டர் விமர்சனம்!