இனி அவகாசம் கேட்க கூடாது : செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

அரசியல்

அமலாக்கத் துறை வழக்கில், இனி கால அவகாசம் கேட்க கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி வரும் செந்தில் பாலாஜி, இன்று (நவம்பர் 7) அமலாக்கத் துறை வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி எஸ்.கார்த்திகேயனிடம், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கவுதமன், பரணிகுமார் ஆகியோர்,ஆஜராக இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறுக்கு விசாரணைக்காக சாட்சி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி ஒத்திவைப்பது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத்துறை தரப்பிலும் விசாரணையை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலகத்தரத்தில் ஐடி பூங்கா : அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Comments are closed.