மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) மக்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதோடு சரி அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, முதற்கட்ட கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் விவகாரம் கடந்த இரு தேர்தல்களின் போது விவாதமாக மாறியது.
கடந்த 5 ஆண்டுகளாக இதே அவையில் நிதியமைச்சர் நிதி ஒதுக்கப்பட்டதாக உறுதி அளித்தார். ஆனால் ஒரு செங்கல் கூட இதுவரை எடுத்து வைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
இந்த விதத்தில் தமிழையும், தமிழ்நாட்டையும் நடத்துவது சரியா… தெளிவுபடுத்துங்கள்” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நட்டா, “உறுப்பினரின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும்.
தொழில்நுட்ப காரணங்களால் தான் இப்படி தாமதம் ஆகிறது” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மூணு வருஷமா சம்பளம் வரல…. மனு பாக்கர் கோச்சின் மறுபக்கம்!
விண்வெளியிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆதிக்கம்… ஸ்டாலின் கான்ஃபிடன்ட்!
Comments are closed.