பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பதவி காலத்தை 2024 ஜூன் வரை நீடிக்க தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜன்பத்தில் உள்ள என்.டி.எம்.டி அரங்கில் நடைபெற்றது.
இரண்டாம் நாள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டாவின் பதவி காலத்தை 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்க செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் 2024 தேர்தலில் நாட்டின் தலைவர் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் 2024 வெற்றிக்கு பிறகும் பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமர் என தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தலைவர் ஜே.பி நட்டா, 2023ம் ஆண்டில் நடைபெறவுள்ள 9 மாநில தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பாஜகவின் ஒவ்வொரு அமைப்பாளர்களும் பாஜக வெற்றியை உறுதி செய்ய பாடுபட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
இமாச்சல பிரதேச தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதனை ஈடுகட்டும் வகையில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக வெற்றி வாகை சூடும் வகையில் பணியாற்றி அசைக்க முடியாத பாஜக கோட்டையாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
2023ம் ஆண்டில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, கர்நாடகா,ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர்,மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
ஸ்ரீஹரிகோட்டாவில் ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை!
ரூ.1000 கோடியை நோக்கி டாஸ்மாக் வசூல்! – ராமதாஸ் வேதனை