நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஜே.பி.நட்டா இன்று (மார்ச் 4) ராஜினாமா செய்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேச மாநிலங்களவை எம்.பியாக ஜே.பி.நட்டா தேர்வானார்.
பாஜக தேசிய தலைவர் நட்டா உட்பட 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.
இந்த பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த முறை குஜராத் தொகுதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வானார்.
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேச எம்.பி.பதவியை நட்டா ராஜினாமா செய்து கடிதத்தை மாநிலங்களவை தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதை மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த முறை,காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியிட்டனர்.
இதில், பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவுக்கு வாக்களித்ததாக சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரசியல் குணா குகையில் கமல்: அப்டேட் குமாரு
கொரோனா குமார்: சிம்புவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவரா?