பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று (ஜூலை 5) இரவு சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்தபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி புண்ணை பாலு உள்ளிட்ட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை (ஜூலை 7) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் கொதிப்படையச் செய்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வளர்ந்துவரும் ஒரு தலைவரின் வாழ்க்கை கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும்.
திமுக – காங்கிரஸ் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது என்பதை ஆம்ஸ்ட்ராங் மரணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்.
24 மணி நேரமும் அற்ப அரசியலில் ஈடுபடாமல் திமுக மற்றும் காங்கிரஸ் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பரிவு காட்டுவது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாபு ஜகஜீவன்ராமும் நீதிபதி சந்துரு கமிஷன் பரிந்துரையும்!
ஓவர் வொர்க் லோட்… தற்கொலை செய்துகொண்ட ரோபோ! – எங்கே, எப்படி தெரியுமா?