கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் (பிப்ரவரி 11) நிறைவு பெறுகிறது. JP nadda coming to Chennai
சென்னையில் நிறைவு பெறும் இந்த யாத்திரைக்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டிருந்த நிலையில் சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது.
அதேவேளையில் சென்னை சென்டிரல் அருகே மின்ட் தங்க சாலையில் நிறைவு விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது.
அதன்படி இன்று தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பதற்காகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகிறார்.
அதற்காக டெல்லியில் இருந்து இன்று மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அவர், மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் நட்டா, 6.30 மணியளவில் மின்ட் சாலையில் சிறிது தூரம் அண்ணாமலையுடன் நடந்து செல்கிறார்.
இரவு 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் 8.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
அங்கு இரவு உணவுக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அதன்பின்னர் இரவு 9.15 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்லும் நட்டா, அங்கிருந்து 9.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு திரும்புகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தைகளின் பிறந்தநாள் எண்ணில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.33 கோடி பரிசு!
இனி காலாவதி தேதியுடன் பழனி பஞ்சாமிர்தம்!
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஏப்பம்… தீர்வு என்ன?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!