பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (பிப்ரவரி 11) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்டிரல் அருகே மின்ட் தங்கசாலை செல்லும் நட்டா, அங்கு சிறிது தூரம் நடைபயணம் செய்கிறார். பின்னர் 7 மணிக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் 8.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
அங்கு இரவு உணவுக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அதன்பின்னர் இரவு 9.15 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்லும் நட்டா, அங்கிருந்து 9.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு திரும்புகிறார்.
ஜேபி நட்டா வருகையை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தல்: திமுக பரப்புரை கூட்டம் அறிவிப்பு!
“பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை”: இறுதியாக சொன்ன எடப்பாடி