பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா? லிஸ்ட் போட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

அரசியல்

மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்று மத்திய தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.

2024-25 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வெளியிட்டு சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜிதேந்திர சிங்,

“இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் இந்தியா 2047 தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூ.6,362 கோடியை பெற்றுள்ளது.

6 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், 77 மாதிரி அம்ரித் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதாலும் மாநிலம் பயனடைந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் எட்டு மடங்கு அதிகரித்து, ரூ.879 கோடியிலிருந்து ரூ .6,362 கோடியாக உயர்ந்துள்ளது, இது மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

நீலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், தமிழ்நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார பன்முகத்தன்மைக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் பாஜக அரசு இந்தத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2024-25 இல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பங்கு நிதி ஆதரவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது,

முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது வரி பகிர்வில் 94.95% அதிகரிப்பு மற்றும் உதவி மானியங்களில் 157.58% அதிகரிப்பு. 50,873.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய பங்கு கிடைத்துள்ளது.

மாநில அரசு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டது  பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பிற மாநிலங்களுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ தமிழகம் பெற்று வருகின்றது. மத்திய பட்ஜெட் 2024-25 தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஒரு வலுவான கட்டமைப்பை அமைக்கிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சமஸ்கிருதம் தெரிந்தால் தான் வேலையா? தொல்லியல் துறைக்கு இது தேவையா? விளாசிய சீமான்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் குளு குளு அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *