ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 13) மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றும் நவம்பர் 20 ஆம் தேதியும் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணியும், அவர்களுக்கு எதிராக பாஜகவும் போட்டியிடுகிறது. முதல் கட்டமாக 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது.
இதில் 64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 683 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த முதல் கட்டத்தில் 73 பேர் பெண்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியும் இன்று வாக்களித்தார்.
வயநாடு இடைத்தேர்தல்
இந்த வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றதால், வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகக் களமிறங்கியுள்ளார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் போட்டியிட்டனர்,
இந்தநிலையில் மாலை 5 மணி வரை 63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் வார்னிங்!
அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 – திமுகவுக்கு தோல்வி பயம் : ராமதாஸ் விமர்சனம்!
உங்களுக்கு மாதம் ரூ.1000 வரவில்லையா? : மகளிருக்கு அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!