ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 23) காலை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 42 சீட்களை கடந்து 51 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது.
ஆனால், சிறிது நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியை பின்னுக்கு தள்ளியது.
தேர்தல் ஆணையத்தின் மதியம் 12 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 26, ஏஜேஎஸ்யூ கட்சி 1, ஐக்கிய ஜனதா தளம் 1, ராம் விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 1 என 29 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 14, ராஷ்டிரிய ஜனதா தளம் 5, சிபிஎம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 2, என 51 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
காண்டே தொகுதியில் போட்டியிட்ட ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பாஜக வேட்பாளர் முனியா தேவியை விட 3,621 வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நயினார் நாகேந்திரனை சந்தித்தது ஏன்? – எஸ்.பி.வேலுமணி விளக்கம்!
குடியரசு தலைவர் தமிழக வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் குதிக்கும் எஸ்.எஃப்.ஐ
வயநாடு இடைத்தேர்தல்: 1 லட்சம் வாக்கு வித்தியாசம்… பிரியங்கா காந்தி முன்னிலை!