ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இன்று (நவம்பர் 23) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இந்தநிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 17, ஏஜேஎஸ்யூ கட்சி 1, ஐக்கிய ஜனதா தளம் 1, என 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 15, காங்கிரஸ் 11, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, சிபிஎம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 3 என 33 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு இடைத் தேர்தல்: பிரியங்கா காந்தி முன்னிலை!
மகாராஷ்டிரா தேர்தல் முன்னிலை நிலவரம்… 100 இடங்களைத் தாண்டிய என்டிஏ கூட்டணி!