நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Published On:

| By Selvam

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று (பிப்ரவரி 2) வெளிநடப்பு செய்தனர்.

நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

அப்போது, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அனுமதி அளிக்காததால், மக்களவை, மாநிலங்களவையில் இருந்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்சிப் பதிவு… விஜய் கில்லி வேகம்: பின்னணியில் டெல்லி

ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share