எம்.எல்.ஏ.க்களை வாங்க பாஜக முயல்கிறது : ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் சட்டசபையில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 48 உறுப்பினர்கள் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜக வெளிநடப்பு செய்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது முதல்வர் ஹேமந்த் சோரன், “பாஜகவினர் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள். பாஜக எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் எங்கள் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்துள்ளோம்” என்று பேசினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் காரணமாக, ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கோரியிருந்தார். இதன்காரணமாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் சொகுசு விடுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று (செப்டம்பர் 4) இரவு ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்தனர்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்டதாக, பாஜக தலைவர்கள் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். 2021-ஆம் ஆண்டு மாநில சுரங்கத் துறையை ஹேமந்த் சோரன் வகித்தபோது, தனக்கு சுரங்க குத்தகையை ஒதுக்கியதாக பாஜக குற்றம் சாட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பாஜக வலியுறுத்தியது.

தேர்தல் ஆணையம் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts