ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக 22, ஏஜேஎஸ்யூ கட்சி 1 என 23 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 6 , காங்கிரஸ் 1 என 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…