இட ஒதுக்கீடு: தமிழகத்தைப் பின்பற்றும் ஜார்கண்ட்

அரசியல்

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மாநில அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு 60 சதவிகிதத்திலிருந்து, 77 சதவிகிதமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இட ஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரை, நீதித்துறை ஆய்விற்கு உட்பட்டு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசு திருத்தங்களை செய்த பின்னரே மசோதா நடைமுறைக்கு வரும் என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

jharkhand assembly bill raising reservation

தமிழகத்தில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 69 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இதற்கான சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்கிற நிலைமை உள்ளது.

அந்தவகையில், தமிழகத்தைப் பின்பற்றி இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கும் நோக்கில் ஜார்கண்ட் மாநிலத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜார்கண்ட் அரசு பதவிகள் மற்றும் சேவைகள் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2022-ன் படி,

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள 60 சதவிகிதம் இட ஒதுக்கீடு 77 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடு வரம்பின் படி, பட்டியலினத்தவர்களுக்கு 10 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக இட ஒதுக்கீடு உயருகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 14 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

பழங்குடியினர்களுக்கு 26 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

jharkhand assembly bill raising reservation

பழங்குடியின மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் 65 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கைக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.

இதுகுறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறும்போது, “மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

இந்த மசோதாவை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலம் ஜார்கண்ட் மக்கள் தங்கள் உரிமைகளையும் மரியாதையும் பெறுவார்கள். தேவை ஏற்பட்டால் டெல்லி சென்று எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!

நள்ளிரவில் சென்னை வந்த அமித்ஷா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0