பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் மற்ற மாநிலங்களைப் போல பீகாரிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி விரைவில் முறிய வாய்ப்பிருப்பதாகவும் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் நிதிஷ்குமார். அவர், எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக கட்டுப்படுவதாக ஜேடியூ எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாக இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை: பினராயிக்கு ஸ்டாலின் கடிதம்!