பாலியல் வழக்கில் கைதான மஜத வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தான் போட்டியிட்ட கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
கர்நாடகாவில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டவர் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரனான இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் உள்ளார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே ரேவண்ணா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேல் 6,67,861 வாக்குகள் பெற்று தற்போது ஹாசன் மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதுச்சேரி : ஓங்கும் காங்கிரஸ் கை!
விழுப்புரத்தில் விசிக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!