மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்தநிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்தநிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் 50 பேருடன் சென்று அஞ்சலி செலுத்த கட்சி தலைவர்களுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்காரணமாக சொற்பமான எண்ணிக்கையில் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கியது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!