ஜெயலலிதாவின் புடவைகள், தங்க வைர நகைகள் : விஜிலன்ஸுக்கு பறந்த கடிதம்!

Published On:

| By Kavi

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் இருந்து விலை மதிப்பு மிக்க புடவைகள், பரிசுப் பொருட்கள், கை கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்குச் செலவிட்ட தொகையை அரசு ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தங்க நகைகள், வைரங்கள் என ஜெயலலிதாவின் 30 கிலோ நகைகள் மட்டுமே கர்நாடக அரசின் கரூவுலத்தில் உள்ளது.

எனவே இதர பொருட்களான விலை உயர்ந்த புடவைகள் 11,344, ஏசி 44, தொலைப்பேசி/இண்டர்காம் 33, சூட்கேஸ் 131, கைக்கடிகாரம் 91, சுவர் கடிகாரம் 27, மின் விசிறி 86,

அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, டீபாய் 34, டேபிள் 31, படுக்கைகள் 24, டிரஸ்ஸிங் டேபிள் 9, 1040 வீடியோ கேசட்டுகள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டும்.

இது தவிர தங்கம், வைரம், ரூபி கல், முத்து என விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட வளையல், பிரேஸ்லெட், தோடு, நெக்லஸ், மூக்குத்தி, செயின், மயில்,

பன்னீர் சொம்பு, பேனா, ஷீட், குங்கும சிமிலி, சந்தன கின்னம், பெல்ட், மோதிரம், காசுமாலை, கடவுள் சிலைகள், காமாட்சி விளக்கு, கீ செயின், மாங்காய், வாட்ச் என 468 மதிப்பு மிக்க பொருட்களையும்,

700 கிலோ வெள்ளி பொருட்களையும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

டிடிஎஃப் வாசன் கார் விபத்தில் சிக்கியது!

உயரும் சினிமா டிக்கெட் கட்டணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel